×
Saravana Stores

குறைதீர் கூட்டத்தில் குழந்தை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு நிதி: கலெக்டர் வழங்கினார்

 

விருதுநகர், நவ.19: விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், கட்டுமானப் பணியிடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மீட்கப்பட்ட 3 குழந்தை தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தில் ரூ.1.10 லட்சம் மறுவாழ்வு நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.கூட்டத்தில் டிஆர்ஓ ராஜேந்திரன், தனித்துறை ஆட்சியர் காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post குறைதீர் கூட்டத்தில் குழந்தை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு நிதி: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Dukadeer ,Virudhunagar ,People's Grievance Resolution Day ,New Collector's Office Partnership ,Collector Jayaseelan ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவக் கல்லூரி...