×
Saravana Stores

அழகர்கோயிலில் மலைச்சாலையில் விழுந்த மரம்: விரைவாக அகற்றிய அதிகாரிகள்

 

மதுரை, நவ. 19: அழகர்கோயில் மலைச்சாலையில் விழுந்த மரத்தை. அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அப்புறப்படுத்தினர்.  அழகர்கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் ஏராளமானோர் மலைமேல் உள்ள ராக்காயி அம்மன் மற்றும் சோலைமலை முருகன் கோயிலில் தரிசனம் செய்ய மலைச்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது வீசிய பலத்த காற்றில் திடீரென பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் அதிகாரிகள் விரைந்து டிராக்டர் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்களுடன் அங்கு சென்று அரை மணி நேரத்தில் மரத்தை அறுத்து முழுமையாக அப்புறப்படுத்தினர். மரம் விழுந்ததில் பக்தர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் கூறும்போது, ‘‘தற்போது மலைப்பகுதியில் மழை பெய்வதால் மண் அரிப்பு ஏற்பட்டு மரம் விழுந்துள்ளது. இது போல் நடக்காமல் இருக்க சாலையோர மரங்களின் தன்மையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post அழகர்கோயிலில் மலைச்சாலையில் விழுந்த மரம்: விரைவாக அகற்றிய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Alagharkoil ,Madurai ,Swami ,
× RELATED சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற...