ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மே 31ம் தேதி வரை மறுநியமனம் நீட்டிப்பு: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள், விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.

கல்லூரி கல்வி இணை இயக்குநர், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரி முதல்வர், கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள் நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு அடுத்த ஆண்டு மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மே 31ம் தேதி வரை மறுநியமனம் நீட்டிப்பு: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: