×
Saravana Stores

ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வு தொடர்பாக நிதிக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒன்றிய வருவாய்வில் மாநிலத்துக்கு வரி பகிர்வு 50%-ஆக அதிகரிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு 50 சதவீதத்தை நிதி ஆணையக்குழு உறுதிசெய்திடும் என்று நம்புகிறேன். சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைப்பதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கும்.  முக்கியமான திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசுகளின் பங்கு முக்கியம் எனவும் அவர் பேசியுள்ளார்.

The post ஒன்றிய அரசிடம் இருந்து வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : EU ,PM ,K. Stalin ,Chennai ,M.P. ,EU government ,Finance Committee Meeting ,Finance Sharing ,Tamil Nadu ,Chief Minister ,MLA ,
× RELATED போன்பே மோசடி-நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!