×
Saravana Stores

நெல்லை கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: நெல்லை கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பசுமை ஹட்ரஜன் மற்றும் சோலார் மின்னுற்பத்தி தொடர்பான தொழிசாலைகள் அதிகளவில் தொடங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலியில் ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இந்நிலையில், நெல்லை கங்கைகொண்டானில் விக்ரம் சோலார் நிறுவனம் சோலார் பேனல் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் பிவி சோலார் மாடியூல் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 3150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கங்கைகொண்டான் சிப்காட்டில் ஏற்கனவே டாடா நிறுவனத்தின் டி.பி.சோலார் நிறுவனம் 313.53 ஏக்கரில் தொழிற்சாலை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post நெல்லை கங்கைகொண்டானில் சோலார் பேனல் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Nellai Gangaikondan ,CHENNAI ,Tamil Nadu Environmental Impact Assessment Authority ,Tirunelveli ,Tuticorin ,Tamil Nadu government ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...