சென்னை: சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உட்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி பகுதியில் இருவேறு இடங்களில் மாஞ்சா நூல் அறுத்து இருசக்கர வாகனங்களில் சென்ற இருவர் காயமடைந்துள்ளனர். தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் அமர்ந்து சென்ற இரண்டரை வயது குழந்தை மற்றும் கருவேட்ட தொழிலாளி என இரண்டு நபர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்து சிறுவர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட ரொட்டாய் மாஞ்சாய் நூல்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் இவரது மனைவி கௌசல்யா இவர்களுக்கு தர்ஷன் என்ற 5 வயது மகனும் இரண்டரை வயது புகழ்வேலன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. பாலமுருகன் மெக்கானிக் வேலை செய்து வரக்கூடிய நிலையில் நேற்று மாலை தனது குடும்பத்தோடு இரு சக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வியாசர்பாடி மேம்பாலம் மேல் சென்றபோது மாஞ்சா நூல் ஒன்று புகழ்வேலன் கழுத்தை அறுத்தது. இதனால் வலியால் துடித்த குழந்தை உடனடியாக எம்.கே .பி நகர் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 தையல்கள் போடப்பட்டது . இது குறித்து பாலமுருகன் அளித்த புகாரின் அடைப்படையில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் மாஞ்சாப்புல் பட்டம் விட்டதாக கல்லூரி மாணவர் ஹரி, 12 ஆம் வகுப்பு மாணவன், கார் ஓட்டுனர் நெல்சன் ஆகியோரை கைது செய்திருக்கின்றனர். இதில் நெல்சன் மாஞ்சா நூல்களை விற்பனை செய்ததாகவும் தெரிய வந்தது. அவரது வீட்டிலிருந்த காத்தாடிகள், ரொட்டாய்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் ராமலிங்கம் அடிகளார் கோயில் அருகில் இருக்கக்கூடிய வியாசர்பாடி புதிய பாலம் வழியாக சென்று கொண்டிருந்த கருவேட்ட நூலன ஜிலானி பாஷா என்பவருக்கும் கழுத்தில் மாஞ்சா நூல் அறுக்கப்பட்டது. இது தொடர்பாகவும் 4 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 85 பட்டம், ரொட்டாய்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
The post சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உட்பட 2 பேர் காயம்: 8 பேர் கைது appeared first on Dinakaran.