மிருகண்டா அணையில் தண்ணீர் திறப்பு தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை கலசப்பாக்கம் அருகே தொடர் மழையால்

கலசபாக்கம், நவ. 16: கலசபாக்கம் அருகே தொடர் மழை காரணமாக மிருகண்டா அணை நீர்மட்டம் 18 20 அடி உயர்ந்துள்ளது பாதுகாப்புக் கருதி வினாடிக்கு 22 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கலசபாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணையின் உயரம் 22.97 அடியாக உள்ளது. தற்போது தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 20 அடி வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 22 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காந்தபாளையம் வில்வாரணி கெங்கல மகாதேவி சிறுவள்ளூர் எலத்தூர் உள்ளிட்ட 17 ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. இதன் மூலம் 3190.96 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தொடர் மழை நீடிப்பதால் பாதுகாப்பு கருதி தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை நீடித்தால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் வெளியேற்ற வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மிருகண்டா அணையில் தண்ணீர் திறப்பு தாழ்வான பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை கலசப்பாக்கம் அருகே தொடர் மழையால் appeared first on Dinakaran.

Related Stories: