செய்யாறு, நவ. 16: செய்யாறு அருகே 13 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் பெற்றோர் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சட்டுவந்தங்கள் கிராமத்தில் உள்ள உறவினரான பஸ் கிளீனர் நாகராஜ்(62) என்பவர் பலமுறை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கதறி அழுதபடி கூறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் நாகராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவர் போக்சோவில் கைது செய்யாறு அருகே appeared first on Dinakaran.