சாத்தூரில் போதிய மழையில்லாதால் விவசாயிகள் கவலை

சாத்தூர், நவ.18: சாத்தூர் அருகே ஒத்தையால் பகுதியில், போதிய மழையில்லாததால் நிலக்கடலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மானாவாரி பயிறு சாகுபடி செய்து வருகின்றனர். ஒத்தையால், ஒ.மேட்டுப்பட்டி, நாகலாபுரம், நெ.மேட்டுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர்.

ஆனால் சாத்தூர் பகுதியில் போதிய மழை இல்லாததால் நிலக்கடலை செடிகள் தற்போது காய்ந்து கருகும் நிலையில் உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் மழை பெய்யவில்லை என்றால் நிலக்கடலை செடிகள் முற்றிலும் காய்ந்து போகும் அபாய நிலை உள்ளது. இதனால் மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து சாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஆடி பட்டம் மானாவாரி கடலை விதைத்தால் ஐப்பசி, கார்த்திகை மாதம் அறுவடை செய்யலாம். ஆனால் தற்போது போதிய மழை இல்லாததால் கடலை செடிகள் கருகி வருகின்றன என்றனர்.

The post சாத்தூரில் போதிய மழையில்லாதால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: