குளச்சல், நவ.18: குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜீடின். கடந்த 13ம் தேதி மீன்பிடி படகில் கடலுக்கு சென்றார். மறுநாள் அவரது படகு மட்டும் தனியாக கடலில் மிதந்துள்ளது. காணாமல் போன மீனவர் ஜீடின் சக மீனவர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் 15ம் தேதி காலை ஜீடின் உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது.அவர் மின்னல் தாக்கி இறந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, இறந்த மீனவரின் வாரிசுதாரருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து மரண நிவாரண தொகைக்கான ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அவரது வாரிசுதாரராகிய அவரது மனைவி மாியசாந்திக்கு கலெக்டர் அழகுமீனா நேரில் சென்று வழங்கினார்.பிரின்ஸ் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வானிலை ஆய்வு மையத்துக்கு பரிந்துரை கலெக்டர் அழகு மீனாவிடம் பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தி கூறியதாவது: குளச்சல் பகுதியில் மின்னல் தாக்கியதில் பூலவிளை, காமராஜர் சாலை, துறைமுகத்தெரு மாதா தெரு ஆகிய இடங்களில் உள்ள 3 வீடுகளில் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நடக்கவில்லை.அதனால் இனி வரும் காலங்களில் பொருள் சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாமலிருக்க குளச்சலை மையமாக வைத்து ஒரு இடி தாங்கும் கட்டமைப்பு அமைக்க வேண்டும் என கூறினார். இதற்கு பதிலளித்த கலெக்டர் ‘ ஏன்? குளச்சல் பகுதியில் தொடர்ந்து இடி – மின்னல் தாக்குகிறது என்பதை கண்டறிய ஆய்வு நடத்த ஐ.எம்.டி. நிறுவனத்திற்கு பரிந்துரைக்கப்படும் என கூறினார்.
The post மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.