பயணிகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பு ராமேஸ்வரம் – கோவைக்கு பகல் நேர ரயில் வேண்டும்: வர்த்தகர்கள்,பொதுமக்கள் வலியுறுத்தல்

 

மண்டபம், நவ.18: தமிழ்நாட்டின் தென் கிழக்கு பகுதியின் புண்ணிய பூமியான ராமேஸ்வரம் நகரையும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராம் கோவையை இணைக்கும் வகையில் மீட்டர் கேஜ் பாதை இருந்தது. அப்போது ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவை, பாலக்காடு ஆகிய பகுதிக்கு பகலில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலக்கட்டத்தில் வண்டி எண் 6115/6116 கோயம்புத்தூர்- ராமேஸ்வரம்- கோயம்புத்தூர் விரைவு ரயிலாகவும் இயக்கப்பட்டது.

எண் 773/774 கோயம்புத்தூர் – ராமேஸ்வரம் – கோயம்புத்தூர் பயணியர் விரைவு வண்டி என இரு ரயில் சேவைகள் இருமார்க்கத்திலும் தினசரியாக இயங்கி வந்தது. மேலும், அதுபோல 764/765 ராமேஸ்வரம் – பாலக்காடு – ராமேஸ்வரம் பயணிகள் வண்டியும் தினசரியாக இயங்கி கொண்டிருந்தது. இந்த இரண்டு ரயில்கள் மூலம், கோயம்புத்தூர், பாலக்காடு பயணிகளும், ராமநாதபுரம் மாவட்ட பயணிகளும் வர்த்தகம், ஆன்மிகம் உள்பட பல்வேறு வகையிலும் நல்ல முறையில் பயன்களை பயணிகள் பெற்று வந்தனர்.

இந்த இரண்டு ரயில்களையும் மதுரையிலிருந்து மண்டபம் வழியாக பாம்பன் ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபோது நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை மார்க்கமாக பாலக்காடுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்ட வந்தது. இந்த ரயில்களால் ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மற்றும் மதுரை பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பழநி பகுதியில் அமைந்துள்ள முருக பெருமானின் ஆறுபடை கோயிலில் ஒன்றான பழநி கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

The post பயணிகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பு ராமேஸ்வரம் – கோவைக்கு பகல் நேர ரயில் வேண்டும்: வர்த்தகர்கள்,பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: