×

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு காரைக்காலில் சபரிமலைக்கு மாலை அணிவிப்பு

 

காரைக்கால், நவ. 17: காரைக்கால் அடுத்த பச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்த்தா ஐயப்பன் கோயிலில் குரோதி வருஷம் கார்த்திகை மாத முதல்நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்,மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஸ்ரீதர்மசாஸ்த்தா ஐயப்பனுக்கு நெய், விபூதி,மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் இவ்வாலயத்தில் அமைந்திருக்கும் கன்னிமூல கணபதி மற்றும் மாளிகைபுறத்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.நேற்று கார்த்திகை முதல் நாள் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சபரி மலைக்கு செல்ல விரதம் மேற்கொள்ள நேற்று முதல் ஐயப்பனின் புனித மாலை அணிந்து கொண்டனர்.

The post கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு காரைக்காலில் சபரிமலைக்கு மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Karaikal ,Karthikai ,Kurothi ,Sridharmashastha ,Ayyappan ,temple ,Pachur ,
× RELATED திருச்செந்தூர் கோயில் விடுதி கட்டணம் குறைப்பு