×
Saravana Stores

போளூர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவில் கலைத்திருவிழா 1500 மாணவர்கள் பங்கேற்பு

போளூர், நவ.17: போளூர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாவட்ட அளவில் நடந்த கலைத்திருவிழாவில் 1500 மாணவர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவில் 18 ஒன்றியங்களை சேர்ந்த 640 பள்ளிகளிலிருந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 1500 மாணவ, மாணவியர்கள் கலைத்திருவிழாவில் கலந்து கொண்டனர். கலைத்திருவிழாவிற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் சத்யா, பேருராட்சி தலைவர் ச.ராணிசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை செ.சுதா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.கவிதாசங்கர் குத்துவிளக்கேற்றி கலைத்திருவிழாவை துவக்கி வைத்தார்.

மாவட்ட அளவில் உள்ள 18 ஒன்றியங்கள் சேர்ந்த 640 பள்ளிகளில் இருந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 1500 மாணவ மாணவியர்கள் கலைத்திருவிழாவில் 89 வகையான போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கலைத்திருவிழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் கலந்து கொண்டு தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பேசினார். இதில் செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வீரமணி, தலைமையாசிரியர் ரா.ராமனுஜம், உதவி தொடக்க கல்வி அலுவலர் ப.சுந்தர் மற்றும் 18 ஒன்றியத்தை சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் எம்.ஜெகன் நன்றி கூறினார்.

The post போளூர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட அளவில் கலைத்திருவிழா 1500 மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Polur Government Girls High School ,Polur ,Thiruvannamalai ,district ,Polur Government Women's High School ,Polur Government Girls' High School ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி...