காற்று மாசு கட்டுப்பாடு: டெல்லியில் ஒரேநாளில் ரூ.6 கோடி அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.6 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். டெல்லியில் காற்று மாசு அளவு ‘கடுமை’ பிரிவில் இருப்பதால் நேற்று முன்தினம் முதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதில், பிஎஸ் 3 உள்ளிட்ட பழைய வாகனங்களையும், மாசு சான்றிதழ் இல்லாத வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த வெள்ளிக்கிழமை மாசு கட்டுப்பாடு சான்று இல்லாமல் ஓட்டப்பட்ட 4,855 வாகனங்களுக்கு ரூ.4.8 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விதிகளை மீறிய வாகனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தனியார் பிஎஸ்-3 பெட்ரோல், பிஎஸ் 4 வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், கிராப் -3 கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் (வெள்ளிக்கிழமை ) விதிகளை மீறிய பிஎஸ் 3 பெட்ரோல், பிஎஸ் 4 டீசல் வாகனங்களுக்கு 550 செலான்கள் வழங்கப்பட்டது.

இதன் மூலம், ரூ.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. முதல்நாளில் மொத்தம் 5.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டது’ என்று தெரிவித்தனர். பாக்.கில் பள்ளி. கல்லூரிகள் மூடல்: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் நவ.24ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post காற்று மாசு கட்டுப்பாடு: டெல்லியில் ஒரேநாளில் ரூ.6 கோடி அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: