புதுடெல்லி: மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதால் பெண்களை பாதிக்கும் ‘பெட்டிகோட்’ புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வறிக்கையில் பகீர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ‘பெட்டிகோட்’ என்ற புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் கட்டுரை வெளியாகி உள்ளது. இந்த ஆய்வில் இரண்டு இந்திய பெண்களில் பெட்டிகோட் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இடுப்பில் பெட்டிகோட்டை இறுக்கமாக கட்டும் பெண்களுக்கு பெட்டிகோட் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று ஆய்வு கூறுகிறது. இது சருமத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படலாம்.
மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதால் அந்த நோயை குணப்படுத்த முடியாது. எதிர்காலத்தில் புண் ஒரு ஆபத்தான காயமாக மாறும். இந்த காயம் பின்னர் பெட்டிகோட் புற்றுநோய் வடிவத்தை எடுக்கிறது. ஆய்வில் இரண்டு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் கூற்றுப்படி, அவர்கள் தங்களது இடுப்பில் பெட்டிகோட்டை இறுக்கமாக கட்டிவந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட உராய்வால் சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர் தோல் புற்றுநோயாக மாறியுள்ளது. பெட்டிகோட் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தால் உடனே சிகிச்சை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளின்படி, இடுப்பில் கருப்பு அடையாளங்கள் தோன்றும். இடுப்பின் மேற்பரப்பு தடிமனாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பெட்டிகோட் புற்றுநோயைத் தடுக்க, ஆடைகளை இடுப்பில் இறுக்கமாக கட்டக் கூடாது. இடுப்பில் கட்டப்படும் துணியை மென்மையானதாக வைத்திருக வேண்டும். சேலை அணிந்திருந்தால், அதன் முடிச்சை மிகவும் இறுக்கமாக வைத்திருக்க கூடாது. உடல் எடையை பராமரிக்கவும். சீரான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தோல் புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இருப்பினும், ஆண்களை விட பெண்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதால் பெண்களை பாதிக்கும் ‘பெட்டிகோட்’ புற்றுநோய்: ஆய்வறிக்கையில் பகீர் தகவல் appeared first on Dinakaran.