10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மணிப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தல்: 3 பேரின் சடலங்கள் மீட்பால் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தப்பட்ட நிலையில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த 3 பேரின் அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மணிப்பூரில் வன்முறை தொடரும் நிலையில், நேற்று மணிப்பூர்-அசாம் எல்லைக்கு அருகே இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அசாம் எல்லையில் அமைந்துள்ள ஆற்றின் கரையில் 2 குழந்தைகள், ஒரு பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும், உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இது கடத்தப்பட்டவர்களின் சடலங்களா? அல்லது வேறு யாருடைய உடல்களா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ சோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த செவ்வாயன்று, ஜிரிபாமில் நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் 10 தீவிரவாதிகளைக் கொன்றனர். அதன்பின் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட மெய்தேய் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

The post 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மணிப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தல்: 3 பேரின் சடலங்கள் மீட்பால் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: