செங்கோட்டை : செங்கோட்டையில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக, எந்நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ள ஆர்ச்சை இடித்து அகற்றக்கோரி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் செங்கோட்டை ரஹீம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டையில் உள்ள ஆர்ச் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பாக கேரளா மாநிலத்தில் இருந்த போது கட்டப்பட்டதாகும். நூற்றாண்டை கடந்த இந்த ஆர்ச் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இருந்தது.
கடந்த சில நாட்களாக இந்த ஆர்ச் மீது கனரக வாகனங்கள் மோதி உடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் யார் தலையிலும், இந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் பயணிகள் தலையில் விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.
எனவே பழமையாக இந்த ஆர்ச்சை இடித்து அகற்றிவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post செங்கோட்டையில் உடைந்து விழும் நிலையில் பழமையான ஆர்ச் appeared first on Dinakaran.