லால்குடி, நவ.16: லால்குடி அருகே பெருவளப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் எம்எல்ஏ செளந்தர பாண்டியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். புள்ளம்பாடியை அடுத்த பெருவளப்பூரில் பிளஸ்1 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் குணவதி மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் லால்குடி எம்எல்ஏ செளந்தரபாண்டியன் கலந்துகொண்டு 85 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். காணக்கிளியநல்லூர் தலைவர் சிங்கராயர், ராஜமாணிக்கம், முகமது ரியாஸ், ஊட்டத்தூர் கண்ணன், இருபால் ஆசிரியர்கள்,கிராம பிரமுகர்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
The post பெருவளப்பூர் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா appeared first on Dinakaran.