முறையாக பராமரிக்கப்படுகிறதா? குழந்தைகள், முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு

திருச்சி, நவ.14: திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்களில் மாவட்ட கலெக்டர் நேற்று நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாத்தூர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அங்கு பராமாிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், தங்கும் அறை, உணவு அருந்தும் அறை, சமையல்அறை, பொருட்கள் இருப்பு வைக்கும் அறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி வகுப்பறைக்குச் சென்று மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.

மேலும், விநோபா நகரிலுள்ள டாக்டா் கமலம்மா பாலகிருஷ்ணன், முதியோர் இல்லத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அங்கு பராமாிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து முதியோர்களிடம் கலந்துரையாடி அவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடா்ந்து, டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் மகளிர் விடுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வழங்கப்படும் உணவின் தரம், பாதுகாப்பு நடவடிக்கைகள், பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். சங்கிலியாண்டபுரத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் Tmsss-14 வயதுக்கு மேற்பட்ட அறிவுசார் குறைபாடுடையோர்க்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லத்தில் ஆய்வு செய்தார். மேலும், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தையும் பார்வையிட்டார். முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணி நடைபெற்று வருகிறது.

மண்ணச்சநல்லூர்் வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு பணி நடைபெற்று வருகிறது. இன்று தீராம்பாளையம், பூனாம்பாளையம், திருவௌ்ளரை, ஆகிய கிராமங்களில் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, விதை சான்று துறை, வேளாண் வணிக துறை அலுவலா்களுடன் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டனா்.

பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்ற போது தீராம்பாளையம் கிராமத்திற்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைவாகவும், சாியான முறையிலும் மற்றும் மாணவா்கள் பாதுகாப்புடனும் முடிப்பதற்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வுகளில், உதவி கலெக்டர் அமித்குப்தா, சமூக நலத்துறை அலுவலா,் விஜயலட்சுமி, இணை இயக்குநர் மருத்துவ நலப்பணிகள் பரமசிவன், குழந்தை பாதுகாப்பு அலுவலா் ராகுல்காந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், மண்ணச்சநல்லூர் தாசில்தார் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

The post முறையாக பராமரிக்கப்படுகிறதா? குழந்தைகள், முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: