சென்னை கண்ணகி நகரில் ஒன்றரை மாத குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம் வெளியீடு..!!

சென்னை: சென்னை கண்ணகி நகரில் ஒன்றரை மாத குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆரோக்யதாஸ், நிஷாந்தி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒன்றரை மாத ஆண் குழந்தையை அப்பகுதியில் சுற்றி திரிந்த பெண் ஒருவர் கடந்த வாரம் நிஷாந்தியிடம் பேசி உங்களுக்கு ஊட்டச்சத்து உள்ள பொருட்களை வாங்கி தருகிறோம்.

அதுபோல உதவிகள் செய்து தருகிறோம் என கூறி ஆட்டோவிலிருந்து தியாகராயநகருக்கு அழைத்து சென்று ஹோட்டலில் உணவு வாங்கி கொடுத்து. ரூ.100 கொடுத்து பால் வாங்க கூறியுள்ளார். தாய் நிஷாந்தி குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்த நிலையில் அந்த பெண் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இதனால் பரிதவித்த தாய் கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து இஸ்பெக்ட்டர் தலைமையில் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் குழந்தையை கடத்திய பெண் தீபா திருவேற்காடு அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தையுடன் அங்கு சேர்ந்து தங்களுக்கு சிகிச்சை வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அங்குள்ள மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் குழந்தைக்கான ஆவணங்கள் எங்கே, குழந்தை எங்கே பிறந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் அந்த பெண் அங்கேயே குழந்தையை வைத்துவிட்டு தப்பியோடினார். இதனை அடுத்து மருத்துவமனை தரப்பில் திருவேற்காடு போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் கண்ணகி நகர் போலீசாருடன் இணைந்து குழந்தையை மீட்ட நிலையில் தாய் நிஷாந்தியிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

கடத்தி சென்ற பெண் தீபாவின் புகைப்படம் கிடைத்த நிலையில் அவரது கணவரை பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் அந்த பெண் கணவருக்கே தெரியாமல் நாடகமாடி குழந்தையை கடத்தி உள்ளார் என தெரியவந்தது. கர்ப்பிணியாக கணவரிடம் நாடகமாடி இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவரது கணவர் மூலமாக தீபாவின் புகைப்படத்தை வைத்து திருவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post சென்னை கண்ணகி நகரில் ஒன்றரை மாத குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படம் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: