திருமங்கலம், நவ. 15: திருமங்கலம் அருகேயுள்ள கே.வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் தங்கமுத்து (44). இவர் அந்த கிராமத்தில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கள்ளிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ முத்துராஜா தலைமையில் போலீசார் தங்கமுத்து கடையில் நேற்று சோதனையிட்டனர். இதில் 2 கிலோ குட்கா பாக்கெட்டுகள் சிக்கியது. மேலும் கடையில் ரூ.17 லட்சம் ரொக்க பணமும் இருந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் கடைக்காரர் தங்கமுத்துவை கைது செய்தனர். மேலும் குட்கா மற்றும் 17 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த பணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 2 கிலோ குட்காவுடன் ரூ.17 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.