- முன்விரோட்டம்
- அரியலூர்
- தாபகூர்
- சுரேஷ்
- கோவிந்தபுதூர் வடக்கு தெரு
- Vikramangalam
- அரியலூர் மாவட்டம்
- முன்விரோதம்
தா.பழூர், நவ. 15: அரியலூர் அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் ( 28). அதே ஊர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (32). இவர்கள் இரு குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவிந்தபுத்தூர் அண்ணா சிலை அருகே இருவரும் மோட்டார் சைக்கிளில் எதிர் எதிரே சந்தித்துக் கொண்டனர்.
அப்போது சத்தியராஜ், சுரேஷிடம் முன்விரோதம் பிரச்சனை குறித்து கேட்டதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை கண்டு அங்கு வந்த சுரேஷின் உறவினர்களான செல்வம், இளவரசன், இந்திரா, ரேணுகா, பிரபாகரன், கதிரேசன், மற்றும் சத்தியராஜின் நண்பர்களான நேரு, ராஜேந்திரன் ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். அப்போது இவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் சுரேஷ் மற்றும் சத்தியராஜ் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் தனச்செல்வன் தாக்கி கொண்ட சுரேஷ், செல்வம், இளவரசன், இந்திரா, ரேணுகா, பிரபாகரன், கதிரேசன் மற்றும் சத்யராஜ், நேரு, ராஜேந்திரன், உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரியலூர் அருகே முன்விரோதம்; இரு தரப்பினரிடையே தகராறு: ஒருவர் கைது: 10 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.