×
Saravana Stores

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்தது: தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் ரூ.2720 சரிவு

சென்னை: தங்கம் விலை கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளியன்று ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு விலை குறைய தொடங்கியது. கடந்த 7ம் தேதி அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலியாக சவரனுக்கு ரூ.1320 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,600க்கு விற்கப்பட்டது. மறுநாள் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கு விற்பனையானது. 9ம் தேதி தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.58,200க்கு விற்கப்பட்டது.

11ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.57,760க்கும் விற்கப்பட்டது. 12ம் தேதி சவரனுக்கு ரூ.1080 குறைந்து ஒரு சவரன் ரூ.56,680க்கும் விற்கப்பட்டது. 13ம் தேதி ஒரு கிராம் ரூ.7045க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.56,360க்கும் விற்கப்பட்டது. நேற்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,935க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.55,480க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்துள்ளது.

The post தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்தது: தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் ரூ.2720 சரிவு appeared first on Dinakaran.

Tags : Sawaran ,CHENNAI ,Diwali ,Last 7th American election ,Dinakaran ,
× RELATED நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை திருட்டு