×
Saravana Stores

பங்குச்சந்தை சரிவு: 2 நாளில் முதலீட்டாளருக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பங்குகள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 701 புள்ளிகள் சரிந்து 77,992 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 242 புள்ளிகள் சரிந்து 23,640 புள்ளிகளுக்கு சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 46 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாகிறது. பங்குகள் விலை சந்தையில் தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்செக்ஸ் 820 புள்ளிகள் சரிந்து 78,675 புள்ளிகளானது. இன்று சென்செக்ஸ் மேலும் 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து 77,991 புள்ளிகளாக குறைந்தது. இரு நாட்களில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. 1,000 கோடிக்கு மேல் உள்ள 900 க்கும் மேற்பட்ட பங்குகள் அவற்றின் சந்தை மூலதனத்தை விட 20% குறைந்தது.

The post பங்குச்சந்தை சரிவு: 2 நாளில் முதலீட்டாளருக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Nifty ,Bombay Stock Exchange ,Dinakaran ,
× RELATED இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு