சென்னை: ஓவியம், சிற்ப துறையில் சிறந்த கலையாசிரியர்கள், சிறந்த கலைநூல்களை பதிப்பித்த நூலாசிரியர்கள் பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 2024-25ம் நிதியாண்டில், ஓவிய, சிற்ப கலைத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 10 கலையாசிரியர்களுக்கு தலா ரூ.10,000 வீதமும், ஓவியம், சிற்பக் கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களை பதிப்பித்த 10 கலை நூல் ஆசிரியர்களுக்கு ரூ.10,000 வீதமும் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் கலை பண்பாட்டுத்துறையால் வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓவிய, சிற்பக்கலை ஆசிரியர்கள் தங்களின் தன்விவர குறிப்புடன், இதுவரை பெற்ற சான்றிதழ்கள், பதிப்பித்த நூல் 2 பிரதிகள் உள்ளிட்ட விவரங்கள்) விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும். தேர்வுக் குழு மூலம் சிறந்த கலையாசிரியர்கள் மற்றும் சிறந்த கலை நூலாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை, இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு 6.12.2024க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
The post ஓவியம், சிற்ப துறையில் பரிசு பெற கலையாசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.