விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விழுப்புரம் வனத்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தியபோது யானை தந்தத்தில் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை விற்பனை செய்ய வந்த திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 5 பேரையும், வாங்க வந்த 7 பேரையும் பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து கார், மூன்று பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்திலான பொம்மைகளின் மதிப்பு ₹3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் வேறு யாராவது முக்கிய புள்ளிகள் தொடர்பில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
The post ரூ.3 கோடி யானைத்தந்த பொம்மைகள் பறிமுதல்: 12 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.