- டாக்டர்
- பாலாஜி
- ராஜீவ் காந்தி
- சென்னை
- டாக்டர்
- கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டாக்டர்
- ராஜீவ் காந்தி மருத்துவமனை
சென்னை: கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்டதன் எதிரொலியாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நேற்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு டேக் சிஸ்டம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நோயாளியாக ஒருவர் சேர்க்கப்படும் போதே அவருடன் வரும் உதவியாளருக்கும் சிவப்பு மற்றும் நீல நிறத்திலான டேக் கொடுக்கப்படுகிறது. பெயர், வயது மற்றும் அவர்களுடைய வார்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை கையில் கட்டிக்கொண்டு சென்றால் மட்டுமே மருத்துவமனையில் இருந்து வெளியே அல்லது உள்ளே செல்ல மருத்துவமனை நிர்வாகம் அனுமதி கொடுக்கிறது. ஏற்கனவே சோதனை முறையில் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று அனைத்து நோயாளிகளுக்கும் அது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில் பார்வையாளர் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
The post மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ‘டேக் சிஸ்டம்’ அமல்: நோயாளிகளுடன் வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு முயற்சி appeared first on Dinakaran.