இதனைக் கண்ட பொதுமக்களும், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து கிண்டி காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷை கைது செய்தனர். மருத்துவமனை வளாகத்தில் கிடந்த மருத்துவரை குத்தியை கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை இயக்குநர் கூறுகையில், சென்னை கிண்டியில் கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜி ஓரிரு நாட்களில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் இவ்வாறு கூறினார்.
The post சென்னை கிண்டியில் கத்தியால் குத்தப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி appeared first on Dinakaran.