சென்னை: சென்னை குன்றத்தூரில் வீட்டில் 2 குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தடயவியல்துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கோடனு வருகின்றனர். எலி மருந்து ஏ.சி. மூலம் பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்ததா என தடயவியல்துறை நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். குன்றத்தூரைச் சேர்ந்த கிரிதரன் – பவித்ரா தம்பதி தங்கள் இரு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஏ.சி. அறையில் எலித் தொல்லைக்காக வைக்கப்பட்ட மாத்திரையில் இருந்து ரசாயனம் பரவியதால் மூச்சுத்திணறல் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை குன்றத்தூரில் வீட்டில் 2 குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தடயவியல்துறை நிபுணர்கள் ஆய்வு appeared first on Dinakaran.