செங்கல்பட்டு, நவ.14: சென்னை கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு பெண்ணிற்கு பாலாஜிதான் சிகிச்சை அளித்து வருகிறார். இதில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் மகன் தனது தாய்க்கு சரியான முறையில் மருத்துவம் அளிக்காமல் தன் தாயின் நிலை குறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அந்த நபர் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு அரசு மருத்துவரை மருத்துவமனையில் பணியில் இருக்கும்போது கத்தியால் குத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அடிக்கடி இது போன்று மருத்துவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி பொது மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. எங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.