- ஆசிரியர் சங்கம்
- நிலை
- ஜனாதிபதி
- நம்பிக்கைகள்
- காஞ்சிபுரம்
- ஆசிரியர்
- முனீத்ரா
- சங்க தியாகராஜன்
- திமுக அரசு
- ஆசிரியர் சங்கம்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக ஆட்சியில் தான் பெறமுடியும் என்று ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணி நிமித்தம் காரணமாக, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் காஞ்சிபுரம் வருகை தந்தார். இப்பணி முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கும்போது, இந்த ஆட்சியில் செய்யவில்லை என்றால் எந்த ஆட்சியில் செய்ய முடியும் என்றும், நிதிநிலைமை சரியானவுடன் படிப்படியாக நான் செய்கிறேன் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்த ஆட்சியில் பெறமுடிய வில்லை என்றால் வேறு ஆட்சியில் பெறமுடியாது என்று நம்பிக்கொண்டு, இந்த ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சரை நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
அவரும் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வார். தேர்தல் அறிக்கையில் சொன்ன பொதுமக்கள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை அறிவிப்புகளை அனைத்தையும் முடித்து விட்டார். விரைவில், அவர் எடுக்கப்போகும் கோரிக்கைகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலம் சார்ந்ததாக இருக்கும். விரைவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் விரைவில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.
மேலும், பகுதிநேர பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. சுட்டிக்காட்டி ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து ஒன்றிய அரசு 60% மாநில அரசு 40 சதவீதமும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்குவதாக தெரிவித்த நிலையில், ஒன்றிய அரசு இந்நாள் வரை அதற்கான ஊதியத்தை வழங்கப்படாததால் மாநில அரசின் 40 சதவீத தொகையை மட்டும் இந்நாள் வரை சம்பளமாக கொடுத்து வந்துள்ளனர். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், விரைவில் மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக ஆட்சியில் தான் பெறமுடியும்: ஆசிரியர் சங்க மாநில தலைவர் நம்பிக்கை appeared first on Dinakaran.