×

டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை; கிண்டி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தகவல்

சென்னை: சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சென்று, கத்திக்குத்து சம்பவம் நடந்த டாக்டரின் அறை மற்றும் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:
மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆர்எம்ஓ, டைரக்டர்கள், டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து உத்தரவிட்டுள்ளேன். டாக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார். நேற்று கூட டாக்டரிடம் 1 மணி நேரம் பேசி இருக்கிறார். இது எதிர்பாராத சம்பவம்.

சென்னை மாநகரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் என எல்லா இடத்திலும் முதலில் புறநகர் காவல் நிலையங்கள் இருந்தன. இப்போது காவல் நிலையங்களாக மாற்றி இருக்கிறோம். அதுபோல் காவல் நிலையங்கள் இல்லாத மருத்துவமனைகளில் புறநகர் காவல் நிலையங்கள் அமைத்துள்ளோம்.

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகில் புறநகர் காவல் நிலையம் இருக்கிறது. இருந்தாலும் அது சற்று தொலைவில் இருப்பதால், மற்றொரு புறநகர் காவல்நிலையம் மருத்துவமனை வளாகத்தில் அமைத்து கூடுதலாக பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு கமிஷனர் அருண் கூறினார்.

The post டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை; கிண்டி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தகவல் appeared first on Dinakaran.

Tags : Guindy Hospital ,Chennai Police Commissioner ,Arun ,Chennai ,Metropolitan Police Commissioner ,Dr. ,Balaji ,Gindi Hospital ,Chennai Police ,Commissioner ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு தினத்தன்று சிறப்பு...