பாட்னா: பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ.12,100 கோடி மதிப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தர்பங்காவில் ரூ.1,260 கோடி மதிப்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.5,070 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1,520 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாடு முழுவதும் பல ரயில் நிலையங்களில் 18 கேந்திராக்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ரூ.4,020 கோடி மதிப்பு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைசார் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திட்டங்களை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி; பீகார் தர்பங்காவில் எய்ம்ஸ் கட்டுவது சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும். எய்ம்ஸ் மருத்துவமனையால் மேற்குவங்கத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பலனடையும். இந்த மருத்துவமனை மூலம் மேற்கு வங்கம், நேபாளத்தில் இருந்து வரக்கூடிய நோயாளிகளுக்கும் பெருமளவு பயன் பெறுவர். எய்ம்ஸ் மருத்துவமனையால் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். பீகாரில் நிதிஷ் ஆட்சிக்கு வந்தபின் நிலைமை மேம்பட்டது.
பாஜக அரசு நாடு முழுவதும் 1 லட்சம் மருத்துவ இடங்களை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும். ஆயுஷ்மான் யோஜனா திட்டம் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் ரூ.1.25 லட்சம் கோடி சேமித்தன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் இல்லையெனில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்றிருக்க மாட்டார்கள். ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 4 கோடி மக்கள் சிகிச்சை பெற்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய 1.5 லட்சம் குடும்பங்களுக்காக சுகாதார சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
The post நாடு முழுவதும் புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.