×
Saravana Stores

மருத்துவர் பாலாஜியின் கழுத்து, முதுகு, தலை உட்பட 7 இடங்களில் கத்திக்குத்து : அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை : மருத்துவர் பாலாஜியின் கழுத்து, முதுகு, தலை உட்பட 7 இடங்களில் கத்திக்குத்து நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், “மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் அல்ல, பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ். மருத்துவர் இதய நோயாளி என்பதால் கத்திக்குத்தில் ரத்தம் அதிக அளவில் வெளியேறி உள்ளது. மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மருத்துவர் பாலாஜியின் கழுத்து, முதுகு, தலை உட்பட 7 இடங்களில் கத்திக்குத்து : அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Doctor ,Balaji ,Minister ,M. Subramanian ,Chennai ,Government Multipurpose Hospital ,Guindy ,Subramanian ,
× RELATED தனது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் பாலாஜி கூறும் வீடியோ வெளியீடு!