×

துறையூரில் விஸ்வகர்மா கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி

துறையூர், டிச.30: திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா கைவினை கலைஞர்கள் அறக்கட்டளை சார்பில் முதலாம் ஆண்டு முன்னிட்டு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாந்த ரத்னா பிரம்மா தயாதாசன் ஆச்சார்யா, சென்னை அப்பர் லட்சுமணன் ஆச்சார்யா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

பயிற்சியில் தச்சுக்கலை,நகை செய்பவர்கள், சிற்பக்கலை உள்ளிட்ட கைவினைக் கலைஞர்கள் 150 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.தச்சு தொழில் செய்த முன்னோடி கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை துறையூர் கைவினை கலைஞர் ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி, துணை சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post துறையூரில் விஸ்வகர்மா கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : VISWAKARMA ,Thuraiur ,Viswakarma Craft Artists Foundation ,Thuriyur district ,Vedantha Ratna Brahma Dayadasan Acharya ,Chennai ,Upper ,Lakshmanan ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினை...