×

தஞ்சையில் 15ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், நவ. 13: தஞ்சாவூரில் வரும் 15ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறுது.தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இம்முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 10 முதல் 12, டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். அதேபோல், வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சையில் 15ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur District Employment and Vocational Guidance Center ,Dinakaran ,
× RELATED ஜெபமாலைபுரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்