×

காவலர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு 2024-25ம் கல்வி ஆண்டிற்கான, நூற்றாண்டு கல்வி உதவி தொகை பெற விண்ணப்பப் படிவங்கள், வரும் டிசம்பர் 31ம் ேததிக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அவர்களின் மாத ஊதியத்தில் காவலர் சேமநல நிதி சந்தா தொகை தவறாமல் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதற்கான சான்று மற்றம் வாரிசுகளின் 12ம் வகுப்புக்கான மதிப்பெண் சான்று ஆகியவற்றை படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பெற்று தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும்போது, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடமும், சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை கமிஷனர்களிடமும் மற்றும் மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் காவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் இணை கமிஷனரிடமும் சான்றொப்பம் பெற்று அனுப்பவும்.

மேலும், விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அனைத்து காவலர்கள் விண்ணப்பத்துடன் சம்பள பட்டியல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை தவறாமல் இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காவலர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Police ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறைதீர் முகாமில்...