×

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

 

சிவகங்கை, நவ. 13: சிவகங்கை கலெக்டர் அலுவலக நூலை வாயில் முன்பு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கோமதி, ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கற்பகவள்ளி வரவேற்றார்.

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலச்செயலர் பாண்டி தொடக்கவுரையாற்றினார். கோரிக்கையை விளக்கி மாவட்ட செயலாளர் லதா பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணதாசன், தமிழ்நாடு ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்டத்தலைவர் உதயசங்கர்உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் இராதாகிருஷ்ணன் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.

The post சத்துணவு ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tamil Nadu Nutrition Employees' Union ,Sivaganga Collector ,Pandi ,Dinakaran ,
× RELATED சாலையை சீரமைத்து பஸ் இயக்க கோரி மனு