×

12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசீஸ் வாகனங்கள் கொடைக்கானல் செல்ல தடை விதிப்பு..!!

திண்டுக்கல்: 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்;

திண்டுக்கல், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரி அவர்களின் இசைவுடன் பொதுநலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள்) திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடைவிதித்து உத்தரவிடப்படுகிறது. இந்த அறிவிப்பு 18.11.2024 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

The post 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசீஸ் வாகனங்கள் கொடைக்கானல் செல்ல தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,District Transport Officer ,Collector ,Regional Transport Officer ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் பனி பாதிப்பில் இருந்து...