×

புரோ கபடி லீக்கில் இன்று பெங்களூரு-ஜெய்ப்பூர், டெல்லி-புனேரி அணிகள் மோதல்

நொய்டா: 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் போட்டிகள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் போட்டிகள் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் – பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரேட்ஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸை எளிதில் வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து நடந்த 2வது லீக் போட்டியில் யு மும்பா – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 48-39 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் தபாங் டெல்லி- புனேரி பால்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

The post புரோ கபடி லீக்கில் இன்று பெங்களூரு-ஜெய்ப்பூர், டெல்லி-புனேரி அணிகள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Jaipur ,Delhi ,Puneri ,Pro Kabaddi League ,Noida ,11th Pro Kabaddi League Series ,Hyderabad ,Dinakaran ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக...