×

பட்டப்பகலில் பேருந்து நிலைய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த போதை ஆசாமி கைது

மரக்காணம் : பட்டப்பகலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மலர்(25) என்ற பெண் சுற்றி திரிந்தார். நேற்று வழக்கம்போல் அப்பெண் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு டீக்கடை அருகில் அமர்ந்திருந்தார். அப்போது மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த கத்திக்குத்து பாலா(45) என்ற போதை ஆசாமி அங்கு வந்தார். அவரிடம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏதோ கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாலா, அருகில் கிடந்த கல்லை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட மலர் தலையில் போட்டுள்ளார். இதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கத்திக்குத்து பாலாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிலைய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போதை ஆசாமி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பட்டப்பகலில் பேருந்து நிலைய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Asami ,Bhatapakal ,Marakkanam ,Azami ,Malar ,Varakkanam ,Viluppuram district ,
× RELATED மரக்காணம் கால்வாயில் மூழ்கிய 3பேர் உடல்கள் மீட்பு