×

தொடரும் கைது நடவடிக்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல்


ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் சாலை பாலத்தை மறித்து மீனவ அமைப்புகள் குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்கள் முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

The post தொடரும் கைது நடவடிக்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram Fishermen Road Blockade ,Rameswaram ,Sri Lankan Navy ,Pampan road bridge ,Sri Lanka Navy ,Rameswaram Fishermen ,Road ,Blockade ,
× RELATED நடுக்கடலில் 2 விசைப்படகுகளுடன்...