×

‘ஜியோ பார்க்’ திட்டம் தொடங்கி வைக்க தமிழக முதல்வர் நவ.15 தேதி பெரம்பலூர் வருகை: அரியலூர் அரசு விழாக்களிலும் பங்கேற்கிறார்

பெரம்பலூர், நவ.12: பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ம் தேதி வர உள்ளதால், முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15ஆம் தேதி பெரம்பலூர்- அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். குறிப்பாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிப்காட் அடிக்கல் நாட்டுவிழா மற்றும் அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் வருகை தந்து, அரியலூர் அருகே கொல்லாபுரம் என்ற பகுதியில் பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். மாலையில் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில், பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

‘ஜியோ பார்க்’ அடிக்கல்: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம், வாலிகண்டபுரம், கொளக்காநத்தம் சப்-ரிஜிஸ்டர் அலுவலக புதிய கட்டிடங்கள், ஆலத்தூர் தாலுக்கா, காரை அருகே, இயற்கை வளங்கள் துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஜியோ பார்க்’ உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

பொதுப்பணித்துறை விறு விறு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் அல்லிநகரம் முதல் பெரம்பலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையிலும், பெரம்பலூரில் பாலக்கரை தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரையிலான சாலையிலும் தூய்மைப் பணிகள்மேற்கொள்ளுதல் பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகம் மற்றும் அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளின் வருகைக்காக பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா மாளிகை ஆகியன தூய்மைப் படுத்தவும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் ஏற் பாட்டில், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம், பொதுப் பணித்துறை ஆகியவற்றின் சார்பாக தூய்மை பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.

The post ‘ஜியோ பார்க்’ திட்டம் தொடங்கி வைக்க தமிழக முதல்வர் நவ.15 தேதி பெரம்பலூர் வருகை: அரியலூர் அரசு விழாக்களிலும் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,Perambalur ,Jeo Park ,Ariyalur ,Tamil Nadu ,M. K. Stalin ,Perambalur district ,M.K.Stalin ,
× RELATED தமிழ்நாட்டிற்கு உறுதுணையாக இருப்போம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்