×

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே

பெரம்பலூர், நவ.13: பெரம்பலூர் மாவட்டத்தில் விளைகின்ற பயிர்களைக் கணக்கெடுக்கும் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை வேளாண் கல்லூரி மாணவர்களோடு இணைந்து வேளாண்மைத் துறையினர் என 557 பேர் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அளவில் சாகுபடிப் பரப்பு மற்றும் அவற்றில் எந்தெந்த பருவங்களில் என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது, பயிர்களின் வளர்ச்சிப் பருவம் ஆகியவற்றை கணக்கெடுத்து, அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களால் எழுதப்படும் அடங்கல்களை கணினி மயமாக்கும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா பிறப்பித்த உத்தரவின் பேரில், தமிழக அளவில் அனைத்து மாவட்டங்களிலும், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியரைக் கொண்டு, வேளாண் துறையினரோடு இணைந்து, பயிரிடப்படும் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 வட்டாரங்களில் கடந்த 7 ஆம்தேதி முதல் வருகிற 22 ஆம்தேதி வரை பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர் தந்தை ஷேன்ஸ் ரோவர் வேளாண் கல்லூரி, திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, தொட்டியம் இமயம் இன்ஸ்டிட்யூட் ஆப் அக்ரிக்கல்ச்சர் டெக்னாலஜி ஆகிய 3 வேளாண்மைக் கல்லூரிகளைச்சேர்ந்த 126 மாணவர்கள், 310 மாணவிகள் என மொத்தம் 436 மாணவ, மாணவிய ரைக் கொண்டு, டிஜிட்டல் கிராப் சர்வே நடைபெற திட்டமிடப்பட்டு கணக்கெடுப்புப் பணிகள் நடை பெற்று வருகிறது.இவர்களுடன், பெரம்பலூர் மாவட்டத்தில் மாவ ட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கீதா தலைமையில், 4துணை இயக்குர்கள், 6 உதவி இயக்குநர்கள், 20 வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 40பேர், அட்மா பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 121 பேர் இந்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்ட அளவில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் மொத்தம் 557 பேர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் ஆன்ராய்டு ஆப் மூலம் கணக்கெடுத்து பதிவு செய்து வருகின்றனர்.இதேபோல், தமிழக அளவில் 38 மாவட்டங்களி லும் வருகிற 22ஆம் தேதிக்குள் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகள் முடிவடைந் தவுடன் அனை த்து அடங்கல்களும் கணினிமயமாக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலெக்டர் தகவல் 1300 போலீசார் பாதுகாப்பு
முதல்வருக்கான பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து, திருச்சி ஐஜி, டிஐஜி மேற்கொண்ட ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஸ் பசேராவிடம் ஆலோசனை செய்தனர். அப்போது, முதல்வருக்கு மேலமாத்தூர் மருதையான் கோவில், குன்னம், பெரம்பலூர் 4ரோடு ஆகிய பகுதிகளில் அளிக்கப்படும் பிரமாண்ட வரவேற்பு, மாவட்ட திமுக அலுவலகம், பூமணம் திருமன மண்டபம் மற்றும் நகரில் முதல்வர் பயணிக்கும் வழித் தடங்கள், நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு காரில் புறப் பட்டு செல்லும் வழித்தடம், பாடாலூர் எல்லை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக 3 எஸ்பிக்கள், 4 ஏடிஎஸ்பிக்கள், 15 டிஎஸ்பிக்கள், 35 இன்ஸ் பெக்டர்கள், சப்.இன்ஸ் பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் வெளி மாவட்ட போலீசார் என மொத்தம் 1300போலீசார் பெரம்பலூர் மாவட்ட அளவில் பாது காப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஏடிஜிபி நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற் பாட்டுப் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று பெரம்பலூரில் நேரில் ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே appeared first on Dinakaran.

Tags : Perambalur District ,Perambalur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்...