×

இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: போலீசாருக்கு மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவு

பெரம்பலூர், நவ.11: வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொ ண்டு ஒடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை விடு படாமல் கைது செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்த மாதாந்திர குற்ற கலந் தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஆதர்ஸ் பசேரா உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில், மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந் தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமை வகித்து அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற கலந் தாய்வும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க ஆலோசனையும் வழங்கினார்.நீதி மன்றங்களில் நீண்டகாலம் நிலுவையில் இருக்காமல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். கள்ளச் சாராயம், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை விடுபடாமல் கைது செய்ய வேண்டும். வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாவட்ட தலைநகர் பெரம்பலூரில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த விதி மீறல்களைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாது காப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான கலந்தாய்வு நடத்தினார். பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சட்டம் ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இந்த குற்ற கலந்தாய்வில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன், டிஎஸ்பிக்கள் (பெரம்பலூர் உட்கோட்டம்) ஆரோக்கியராஜ், (மங்கள மேடு உட்கோட்டம்) தனசேகரன், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் பாடாலூர் குன்னம் மங்களமேடு அரும்பாவூர் கைகளத்தூர் வி களத்தூர் மருவத்தூர் பெரம்பலூர் மற்றும் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போக்குவரத்து காவல் பிரிவு ஆகியோரின் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோர்ட் போலீசார் அனைவரும் கலந்து கொண்டனர்.

The post இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: போலீசாருக்கு மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : District SP ,Perambalur ,Perambalur district SP ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக சிறப்பு மனு முகாமில் 44 மனுக்கள் வந்தன