×

பாஜ மாநில நிர்வாகிக்கு மகளிர் கோர்ட் பிடிவாரன்ட்

கோவை: பாஜ நிர்வாகிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏ.பி.முருகானந்தம். இவர், பாஜ மாநில பொதுச்செயலாளராக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். இவருக்கும், ஞானசவுந்தரி என்பவருக்கும் இடையே கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், சில மாதங்களிலேயே இவரது மனைவி ஞானசவுந்தரி தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை தனியாக நடந்து வந்தது. இதற்கிடையில், ஞானசவுந்தரிக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட நகை மற்றும் பொருட்களை திருப்பிக்கொடுக்க வேண்டும் என அவரது தந்தை சுந்தரசாமி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், இதை ஏ.பி. முருகானந்தம் ஏற்கவில்லை. இதையடுத்து, சுந்தரசாமி கோவை மாவட்ட கூடுதல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, பலமுறை சம்மன் அனுப்பியும் ஏ.பி. முருகானந்தம் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி ரகுமான், நேற்று ஏ.பி. முருகானந்தத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, வரும் 27ம் தேதி விசாரணையின்போது, அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

The post பாஜ மாநில நிர்வாகிக்கு மகளிர் கோர்ட் பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,Coimbatore Women's Court ,AP ,Muruganandam ,Gandhipuram ,state general secretary ,Tirupur ,Gnanasaundari ,Dinakaran ,
× RELATED விஜய் கட்சியுடன் பாஜ கூட்டணியா? வானதி நழுவல்