×
Saravana Stores

மகளிர் சுயஉதவி குழு கடன் விவகாரம்; காதல் மனைவியை அடித்து கொன்று 8 துண்டாக்கி சூட்கேசில் வைத்து வீச்சு: 10 நாளாக காணவில்லை நாடகமாடிய கணவன், மாமியார், கார் டிரைவர் கைது

திருவண்ணாமலை: மகளிர் சுய உதவிக்குழு கடன் விவகாரத்தில் காதல் மனைவியை கொன்று 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் கொண்டு சென்று சூளகிரி காட்டில் வீசிய கணவன், உடந்தையாக இருந்த மாமியார், கார் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை பே கோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி(36), ஆட்டோ டிரைவர். அவரது மனைவி சரண்யா(29). திருவண்ணாமலையில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் சரண்யா வேலை செய்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டு, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு, ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

கடந்த 31ம் தேதி தீபாவளியன்று கோபிக்கும் அவரது மனைவிக்கும் இடையே மகளிர் குழுக் கடன் தொகையை செலுத்துவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, சரண்யா மாயமானார். இதுதொடர்பாக, சரண்யாவின் தாய் காவேரி கொடுத்த புகாரின் பேரில், திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். மனைவியை 10 நாளாக காணவில்லை என்று கணவர் கோபியும் தேடுவதுபோல நடித்துள்ளார். ஆனால் அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது, மனைவியை ெகாலை செய்து, உடலை கொண்டுசென்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி காப்புக்காடு பகுதியில் வீசியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கோபியை கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரிக்கு அழைத்துச் சென்று, 8 துண்டுகளாக வெட்டி வீசப்பட்டிருந்த சரண்யாவின் சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்து கீழே தள்ளயதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாகவும், உடலை 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் வைத்து கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்று காட்டுப்பகுதியில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு தனது தாய் சிவகாமியும், நண்பரான கார் டிரைவர் விமலும் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவகாமி மற்றும் கார் டிரைவர் விமல் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

The post மகளிர் சுயஉதவி குழு கடன் விவகாரம்; காதல் மனைவியை அடித்து கொன்று 8 துண்டாக்கி சூட்கேசில் வைத்து வீச்சு: 10 நாளாக காணவில்லை நாடகமாடிய கணவன், மாமியார், கார் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Self-Help Group ,Suulagiri forest ,Tiruvannamalai Bay Tower ,
× RELATED திருவண்ணாமலை கார்த்திகை தீபத்...