×

திராவிட அரசியல் இருப்பதால்தான் தமிழ்மொழி பாதுகாப்பாக உள்ளது: திருமாவளவன் பேச்சு

சென்னை: திராவிட அரசியல் இருப்பதால்தான் தமிழ் மொழி பாதுகாப்பாக உள்ளது என திருமாவளவன் பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் மறைந்த த.வெள்ளையன் உருவப் படத்திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், கவிஞர் அறிவுமதி ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த வெள்ளையன் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினர்.

அப்போது, திருமாவளவன் பேசியதாவது:
திராவிடம் என்பது ஒரு கருத்தியல், கருத்தியல் ரீதியாகத்தான் அது முதலில் கையாளப்பட்டது. திமுக வெறுப்பை திராவிட அரசியல் வெறுப்பாக மாற்றுகிறார்கள். திராவிடம் இருப்பதால்தான் தமிழ் பாதுகாப்பாக இருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் பாதுகாப்பாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post திராவிட அரசியல் இருப்பதால்தான் தமிழ்மொழி பாதுகாப்பாக உள்ளது: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Chennai ,President ,Tamil Nadu Businessmen's Association ,T.Vellayan ,Koyambedu market ,
× RELATED அவதூறுகளை புறந்தள்ளுவோம்: கட்சித் தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம்