×

ஏவிஏ குழும நிர்வாக இயக்குனர் ஏ.வி.அனூப் எழுதிய யூ-டர்ன் நூல் வெளியீடு

சென்னை: ஏவிஏ குழும நிர்வாக இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஏ.வி.அனூப் எழுதிய யூ-டர்ன் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மெடிமிக்ஸ், மேளம், சஞ்சீவனம் உள்ளிட்ட உலகளாவிய பிராண்டுகளின் தலைவரும் ஏவிஏ குழுமத்தை நிர்வாக இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஏ.வி.அனூப், தனது வாழ்க்கை வரலாறு, பணி அனுபவம், அலுவலகம் மற்றும் தலைமை அனுபவம் குறித்தான விவரத்தை ‘யூ-டர்ன்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி உள்ளார். இதனை சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளது.

தமிழ் பதிப்பு புத்தகத்தை கியூஏஎன்டிஏஏ குரூப் தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ், குடியிருப்பு அல்லாத தமிழர்கள் நல வாரியம் நிர்வாகி மீரன், டிஇபிஏ பால் பிரபாகரன், யூஏஇ தமிழ் சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில பதிப்பு பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரீஸ் குரூப் தலைவா சோகன்றாய், உலக மலையாளி கவுன்சில் தலைவர் சந்தோஷ், சிகுள் குரூப் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். அதேபோல மலையாளத்தில் டிசி புத்தகம் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகங்களை குறித்து ஏ.வி.அனூப் கூறியதாவது: எனது வாழ்க்கை வரலாறு மற்றும் என்னுடைய நினைவுகள் அனைத்தும் மூன்று மொழிகளில் புத்தகமாக வெளியிடுவதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. குறிப்பாக மலையாளத்தில் முதலில் வெளியே விடப் பிறகு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இதனால் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில பதிப்பு மூலம் உலக அளவில் இந்த புத்தகம் சென்றடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ஏவிஏ குழும நிர்வாக இயக்குனர் ஏ.வி.அனூப் எழுதிய யூ-டர்ன் நூல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : AV Anoop ,AVA Group ,CHENNAI ,AV Anup ,Medimix ,Melam ,Sanjeevanam ,
× RELATED ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்