×

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு-இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கடற்கரை நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று கணிக்கப் பட்டிருந்தது. பின்னர், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.

மியான்மர் கடல் பகுதியில் உள்ள காற்று சுழற்சி, வடகிழக்கு காற்றை தடை செய்வதன் காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இரண்டு முறை தாமதமான நிலையில் இன்று இரவுக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரை நோக்கி மேற்குவாக்கில் மெதுவாக நகரக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு அதாவது, நவம்பர் 15ம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : southwest bank sea ,Indian Meteorological Centre ,Delhi ,Indian Meteorological Survey ,Tamil Nadu ,Sri Lanka ,
× RELATED தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த...